
வெனிசுவெலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ தப்பிக்க முயற்சித்திருந்தால், அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார் என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுவெல ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை கைது செய்வதற்கு – அமெரிக்கா பல மாதங்களாக திட்டமிட்டதோடு அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டது.
எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக நிகோலஸ் மதுரோவின் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த சேஃப் ஹவ்ஸ்-இன் மாதிரியை வடிவமைத்து அதனை கொண்டு அமெரிக்க படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
மேலும் 63 வயதான மதுரோ எங்கு தூங்குவார், என்ன சாப்பிடுவார், என்ன உடை அணிகிறார் என்பது முதல் – அவரின் செல்லப்பிராணி வரை அனைத்தையும் பல மாதங்களாக அமெரிக்கா உளவு பார்த்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட கண்காணிப்புக்கு பிறகு ‘ஒபரேஷன் அப்ஸலூட்’ நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்கா தனது தாக்குதலை தொடங்கியதும் தலைநகரத்திலுள்ள ராணுவ வளாகத்தில் இருந்த மதுரோ – எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக அமைக்கப்பட்ட சேஃப் ஹவ்ஸ்-இல் தஞ்சம் அடைய முயற்சித்துள்ளார்.
ஆனால் வெறும் 47 செக்கன்களில் கதவு உடை க்கப்பட்டு – அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த கைதுக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம், அமெரிக்க படைகளுக்கு மதுரோ ஒத்துழைக்க தவறி இருந்தால் அவரை சுட்டுக் கொன்று இருப்பீர்களா என்று கேட்கப்பட்ட போத. அதுவும் நடந்திருக்கலாம் என்றார்.
இரண்டு மணி நேரம் 20 நிமிடங்களில் மொத்த நடவடிக்கையை முடிந்ததாகவும் இதில் அமெரிக்க படையினர் ஒருவர் கூட உயிரிழக்க வில்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரம் இந்த நடவடிக்கையின் போது மதுரோவின் பாதுகாப்பு படையை சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாக வெனிசுவல்லா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது


