தலைப்புச் செய்திகள்

வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியாக வீப் டெல்சி ரொட்ரிகஸ் நியமனம்

வெனிசுவேலாவின் துணை ஜனாதிபதியாக இருந்த வீப் டெல்சி ரொட்ரிகஸ், அந்த நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெனிசுவேலாவின் உச்சநீதிமன்றம் இவ்வாறு நியமித்துள்ள நிலையில், அதனை அந்த நாட்டு ராணுவம் அங்கீகரித்துள்ளது.

வெனிசுவேலா நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதை ‘கோழைத்தனமானது’ என விமர்சித்த வெனிசுவேலா பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ லோபஸ், நாட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அழைப்பு விடுத்துள்ளார்.

தங்கள் நாடு வெளிப்புற அச்சுறுத்தல்கள் இல்லாமல் மரியாதையுடன், சர்வதேச ஒத்துழைப்புடன் வாழ ஆசைப்படுகிறது, என இடைக்கால ஜனாதிபதி வீப் டெல்சி தெரிவித்துள்ளார்.