தலைப்புச் செய்திகள்

வெளிநாட்டு பெண் ஊடகவியலாளரின் பணம் மற்றும் பொருட்களைத் திருடியவர் கைது

அவுஸ்ரேலிய ஊடகவியலாளர் ஒருவரின் கைத்தொலைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் பணம் அடங்கிய கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உனவட்டுன கடற்கரையிலுள்ள உணவகமொன்றுக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேற்படி ஊடகவியலாளர் ஒரு பெண்ணாவார். அவர் இலங்கைக்கு தனியாக வந்துள்ளார்.

திருடப்பட்ட பையில் ஒரு ஐபோன், வெளிநாட்டு பணம் மற்றும் வங்கி அட்டைகள் இருந்தன என்று பொலிஸ் கூறியுள்ளனர்.

பொருட்களை களவு கொடுத்தவர் இன்று (04) உனவட்டுன சுற்றுலா பொலிஸாரிடம் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அவர் நாளை (05) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.