
இலங்கை மின்சார சபை – 2026 ஆம் ஆண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்துக்குரிய முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளது. அதில் ஆண்டின் முதல் காலாண்டில் 11.57% கட்டண அதிகரிப்பு தேவை என, சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த முன்மொழிவு ஜனவரி தொடக்கம் மார்ச் வரையிலான காலகட்டத்திற்கான மின்சார கட்டணங்களை உள்ளடக்கியதாகும்.
மேலும் வீடு, மத ஸ்தலங்கள், தொழில்துறை நிறுவனங்கள், வணிக மற்றும் பிற நுகர்வோர் பிரிவுகளில் மின்சார கட்டணங்கள் மற்றும் நிலையான மாதாந்த கட்டணங்களில், இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் கீழ், வீட்டு மின்சார கட்டணங்களில், பாவிக்கும் மின் அலகுகள் மற்றும் நிலையான கட்டணங்கள் இரண்டிலும் அதிகரிப்பு மேற்கொள்ளப்படும்.


