
‘முழு நாடுமே ஒன்றாக’ செயற்றிட்டத்தில் தமிழ் மொழியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பங்கு குறித்து அறிவூட்டும் செயலமர்வு இன்று (26) புதன்கிழமை திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வேண்டுகோளுக்கமைய அரசாங்க தகவல் திணைக்களம் – இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவின் பூரண வழிகாட்டலில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 40 ற்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.

இதில் வளவாளர்களாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றஷாட், ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டார ஆகியோர் பங்கேற்றனர்.
விஷ போதைப்பொருள் பாவனையினை முழுமையாக ஒழிக்கும் தேசிய செயற்றிட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் – ஊடகவியலாளர்களின் பங்கு குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.





