தலைப்புச் செய்திகள்

கோமரன்கடவல பிரதேச சபைத் தவிசாளர் மரணம்

கோமரன்கடவல பிரதேச சபையின் தவிசாளர் ரங்க பிரபாத் தர்மதாச காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

34 வயதான தவிசாளர், கோமரன்கடவல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலுள்ள கோமரன்கடவல பிரதேச சபையின் தவிசாளராக அவர் பதவி வகித்து வந்தார்.

பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு உடல் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகிறது.