தலைப்புச் செய்திகள்

இலங்கையில் யானைகளின் தொகை அதிகரிப்பு: எத்தனை உள்ளன தெரியுமா?

இலங்கையில் ஆகக்குறைந்தது 7,451 யானைகள் உள்ளன என சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கின்றது.

2024இல் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புள்ளிவிவரம் – யானைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காட்டுவதாக உள்ளது.

1993 இல் குறைந்தபட்சம் 1,967 யானைகளும், 2011 இல் 5,879 யானைகளும் பதிவானது. 2021 மற்றும் 2024 க்கு இடையில் மட்டும், யானைகளின் தொகை 1,572 அதிகரித்துள்ளது.

மேலும், தந்தங்களைக் கொண்ட இளம் யானைகளின் சதவீதமும் 2024 இல் 17.6 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது 2011 இல் 8.4 சதவீதமாகவும் 1993 இல் 11.0 சதவீதமாகவும் இருந்தது. தற்போதைய தொகை, 2021–2024 காலகட்டத்தை விட 9.2 சதவீத அதிகரிப்பைக் காட்டுகிறது. இது இனப்பெருக்க அதிகரிப்பையும், உயிர்வாழும் காலத்தில் முன்னேற்றத்தையும் வெளிப்படுத்துகிறது.