தலைப்புச் செய்திகள்

உம்ரா குழு பயணித்த பஸ் – டீசல் பவுசருடன் மோதி, மதீனா அருகே விபத்து; 45 பேர் மரணம்

ம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி, மதீனா அருகே டீசல் பவுசருடன் மோதியதில் குறைந்தது 45 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். பலியானவர்கள் இந்தியர்கள் என்றும், அவர்களில் பலர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர்களில் குறைந்தது 16 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

“45 பேர் இறந்துவிட்டனர், தற்போது வைத்தியசாலையில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்” என, ஹைதராபாத் பொலிஸ் ஆணையாளர் கூறியுள்ளார்.

இந்த விபத்து இந்திய நேரப்படி இன்று (17) அதிகாலை 1.30 மணியளவில் மதீனாவிலிருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள முஃப்ரிஹாத்தில் நடந்ததுள்ளது.

இந்தக் உம்ரா குழு நொவம்பர் 09ஆம் திகதி ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு மக்காவில் உம்ரா கடமைகளை நிறைவேற்றி விட்டு, மதீனாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.