தலைப்புச் செய்திகள்

யுத்த நிறுத்தம் அமுலிலுள்ள நிலையில், 09 பலஸ்தீனர்கள் கொலை: இஸ்ரேலிய படையின் அத்துமீறல் ஆரம்பம்

சித்திரவதைக்கு உள்ளான நிலையில் இஸ்ரேல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பலஸ்தீனியர்

இஸ்ரேலில் இருந்து பலஸ்தீனியர்கள் 45 பேரின் உடல்களை செஞ்சிலுவைச் சங்கம் பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளன.

மரணத்துக்கான காரணம் என்ன என்பதை அறிவதற்காக, பிரேத பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்கா, எகிப்து, துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேலின் மோசமான சிறைகளில் இருந்து சுமார் 2,000 கைதிகள் உயிருடன் நேற்று (13) விடுவிக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் மத்தியஸ்த போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து, வடக்கு காஸா நகரத்திலும் தெற்கு கான் யூனிஸிலும் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முயன்ற குறைந்தது ஒன்பது பலஸ்தீனியர்களை இஸ்ரேலிய படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

யுத்த நிறுத்தம் தொடங்கியதையடுத்து நடைபெற்ற பெரிய அத்துமீறல் இது என்று தெரிவிக்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் 44 உடல்கள் வைத்தியசாலைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த 29 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இறந்தவர்களில் 38 பேரின் உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டதாகவும், மீட்டெடுக்க முடியாத நிலையில், இன்னும் பலர் சிக்கியுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

ஒக்டோபர் 7, 2023 முதல் காஸாவில் 67,913 பேர் இறந்துள்ளனர். 170,134 பேர் காயமடைந்துள்ளனர்.