
அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றதை அடுத்து, நேற்று (08) காலை உதவிப் பொலிஸ் பரிசோதகர் மற்றும் சார்ஜன்ட் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பொலிஸ் நிலையத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் வசமிருந்த நிலையில், குறித்த சார்ஜன்ட் ரிசர்வ் பணியில் இருந்தார்.
இந்த நிலையில் மாத்தளை – சமகிபுராவைச் சேர்ந்த 22 வயது சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை (07) ஒரு நபரைத் தாக்கி 30,000 கொள்ளையடித்தார் என்றும், கைது செய்யப்பட்ட நேரத்தில் ஒரு தொகை ஹெராயின் வைத்திருந்தார் எனவும் கூறி கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபர் நேற்று புதன்கிழமை (08) காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்த போது, அவர் செவ்வாய்க்கிழமை இரவு காவலில் இருந்து தப்பிச் சென்றார்.

இதனையடுத்து, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவபதிரனவின் அறிவுறுத்தலின் பேரில் – அனுராதபுரம் பொலிஸ் தலைமைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜெயவீர ராஜபக்ஷ விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.


