
2021 ஆம் ஆண்டு தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் இன்று (02) தீர்மானித்துள்ளது.
இதற்கமைய அடுத்த ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக – றிஷாட் பதியுதீனை சிஐடியினரை் கைது செய்து தடுப்பக் காவலில் வைத்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெனாண்டோ ஆகியோர் இதில் அடங்குவர். மனு மீதான விசாரணை மார்ச் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


