
“கத்தார் பிரதமரிடம் நான் பேசினேன்” என்று – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்ற நெதன்யாகு, அங்கு ஜனாதிபதி டொனால் ட்ரம்புடன் – ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே, அவர் இதனைக் கூறினார்.
“இஸ்ரேல் – பயங்கரவாதிகளையே குறி வைக்கிறது. கத்தாரை அல்ல. மேலும், கத்தார் மக்கள் உயிரிழந்தமைக்கு நான் வருந்துகிறேன். அது எங்கள் இலக்கு கிடையாது” என்று, கத்தார் பிரதமரிடம் தான் கூறியதாகவும் நெதன்யாகு மேலும் தெரிவித்தார்.
கத்தாரில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் – விமானத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியிருந்தது.

ஹமாஸ் தலைவர்கள் ஒன்று கூடினார்கள் எனக் கூறப்படும் இடமொன்றை குறிவைத்து இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியது. இதில் கத்தார் பிரஜைகள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.
தொடர்பான செய்தி: கத்தார் தலைநகர் தோஹாவில், ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து, இஸ்ரேல் விமானத் தாக்குதல்



