தலைப்புச் செய்திகள்

இலங்கையின் வயது முதிர்ந்த ஆண் யார் என, உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

இலங்கையின் மிகவும் வயதான ஆண் – காலி மாவட்டம் கரந்தெனியவில் வசிக்கும் போலண்ட் ஹகுரு மெனியேல் என, முதியோருக்கான தேசிய செயலகம் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளது.

இவரிடமுள்ள அடையாள அட்டையில் குறிப்பிட்டுள்ளதன் படி, இவருக்கு தற்போது 110 வயதாகிறது.

போலண்ட் ஹகுரு மெனியேல் 1915ஆம் ஆண்டு ஜுன் மாதம் 04ஆம் திகதி கரந்தெனிய பிரதேச செயலகத்தில் உள்ள அங்குலுகல்ல கிராம சேவையாளர் பிரிவில் பிறந்தார்.

இவர் தனது வாழ்நாள் முழுவதும் தனது ஊரிலேயே வாழ்ந்து வருகின்றார். விவசாயம் மற்றும் கறுவா அறுவடையை தொழிலாகக் கொண்ட இவர், கிராம சமூகப் பணிகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

05 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றிருக்கும் இவருக்கு எழுதவும் – வாசிக்கவும் முடியும். இவர் ஒன்பது பிள்ளைகளின் தந்தையாவார். அண்மையில் மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி அவருடைய வீட்டுக்குச் சென்று பரிசுகளை வழங்கி நலம் விசாரித்தமை குறிப்பிடத்தக்கது.