
அமெக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்துக்கு அமைவாக, அங்குள்ள சுமார் ஒரு லட்சம் அரச ஊழியர்கள் இன்று (30) பதவி விலகவுள்ளனர்.
நிர்வாக செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, அரச ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் தீர்மானமொன்றை எடுத்திருந்தது. அதற்கு அமைவாக, அரசு ஊழியர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் தங்கள் பதவி விலகியுள்ளனர்.
பதவி விலகலை இந்த மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அவர் கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், இன்று ஒரு லட்சம் அரச ஊழியர்கள் பதவி விலகவுள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதியில், 23 இலட்சமாக இருந்த அரச பணியாளர்களின் எண்ணிக்கை, இந்த மாத இறுதியில் 21 லட்சமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்பின் கொள்கைகளால், கடந்த ஜூன் மாத இறுதிக்குள், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கறுப்பின பெண்கள் – தங்கள் பணிகளை விட்டு வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


