தலைப்புச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருளை விடவும் ஆபத்தான ‘மெஃபெட்ரோன்’, இலங்கையில் முதன்முறையாக கண்டுபிடிப்பு

இலங்கை முதன்முறையாக மிகவும் ஆபத்தான செயற்கை ஊக்கியாகச் செயற்படும் ‘மெஃபெட்ரோன்’ (Mephedrone) எனும் போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளதாக, தெற்கு மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்ஸிரி ஜெயலத் தெரிவித்துள்ளார்.

வெலிகம பகுதியில் செப்டம்பர் 21ஆம் திகதி கைது செய்யப்பட்ட மோல்டோவா (Moldova) நாட்டுப் பிரஜையிடமிருந்து மீட்கப்பட்ட பொருளை – அரச பகுப்பாய்வினர் பரிசோதித்ததைத் தொடர்ந்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, அரச பகுப்பாய்வாளர் ‘மெஃபெட்ரோன்’ போதைப்பொருள் கண்டறியப்பட்டமையை உறுதிப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஐஸ் என பொதுவாக அழைக்கப்படும் படிக மெத்தாம்பேட்டமைன் போன்ற பிற போதைப்பொருள்களை விட ‘மெஃபெட்ரோன்’ எனும் ஊக்க மருந்து, மிகவும் ஆபத்தானது என்று, தெற்கு மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்ஸிரி ஜெயலத் மேலும் தெரிவித்துள்ளார்.