தலைப்புச் செய்திகள்

அர்ச்சுனா எம்.பி, 02 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் இன்று (29) காலை கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தலா 01 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வந்திருந்த நிலையில், அவரிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர், அவரை பொலிஸார் கைது செய்தனர்.

கொழும்பில் சமீபத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தின் போது, ​​பணியிலிருந்த கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இடைஞ்சல் செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது