
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் வழங்கச் சென்ற நிலையில் அவர் கைதானார்.
கொழும்பில் சமீபத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்ற போது அவரின் வானத்தை வீதிச் சட்டத்தை மீறும் வகையில் நிறுத்தியதாகவும், அதனை பொலிஸார் சுட்டிக்காட்டிய போது, அவரை நாடாளுமன்ற உறுப்பினர் மோசமாக பேசியதாகவும் – திட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று வாக்குமூலம் வழங்குவதற்காக – கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சென்றிருந்த நிலையில், அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.



