
ஆங்கில டிப்ளோமா பரீட்சையில் ‘குதிரை ஓடியமை’ (உரிய பரீட்சார்திக்குப் பதிலாக வேறு ஒருவர் பரீட்சையை எழுதியமை) தொடர்பில் விசாரணை நடத்தி, உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரமத நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பாளி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் நடத்திய ஆங்கில டிப்ளோமா பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய பரீட்சார்த்திக்குப் பதிலாக, வேறொரு நபர் பரீட்சைக்குத் தோற்றிய சம்பவம் குறித்து விசாரிக்குமாறு – கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம கொழும்பு மோசடி விசாரணை பிரிவுக்கு உத்தரவிட்டார்.
விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க உத்தரவு பிறப்பிக்குமாறு, கொழும்பு மோசடி விசாரணை பிரிவு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.



