தலைப்புச் செய்திகள்

ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை நொவம்பர் மாதத்துக்குள் முடிக்க உத்தேசம்: கல்வியமைச்சின் செயலாளர்

2026 ஆம் ஆண்டுக்கான – தரம் 1 மற்றும் தரம் 6 பாடசாலை ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை நெவம்பர் மாத இறுதிக்குள் முடிக்க உத்தேசித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (TOT) திட்டத்தின் சுமார் 80% ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள குழு – தற்போது மஹரகமவில் உள்ள தேசிய கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருவதாகவும் களுவேவா குறிப்பிட்டார்.

இந்த திட்டம் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் பயிற்சி குழுக்களைத் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் அனைத்து மாகாணங்களிலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்றும் அவர் விவரித்தார்.

இந்தப் பயிற்சி பெற்ற குழுக்களால் வலய மற்றும் கோட்ட மட்டங்களில் ஆசிரியர்களுக்கான பயிற்சி – நொவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அதே நேரத்தில் தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான தொகுதிகள் (modules) அச்சிடும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது என்றும் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.