
மித்தெனிய பகுதியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட ரசாயனப் பொருள், ஐஸ் எனப்படும் மெத்தம்பேட்டமைன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு கைப்பற்றப்பட்ட ரசாயனப் பொருளில் இருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில், 17இல், ஐஸ் தயாரிக்கப்பயன்படும் ரசாயனம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மித்தெனியவில் சுமார் 50 ஆயிரம் கிலோகிராம் ரசாயனம் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையினர் – கடந்த வெள்ளிக்கிழமை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு வழங்கிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நெடோல்பிட்டிய மற்றும் கந்தானை பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ரசாயனப் பொருள்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அது பற்றிய அறிக்கைகள் அடுத்த வாரம் வழங்கப்படும் எனவும், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை கூறியுள்ளது.

பாதாள உலக குற்றவாளி பேக்கோ சமன் என்பவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மெத்தனியவில் மேற்படி ரசாயனப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.


