தலைப்புச் செய்திகள்

அனைவருக்கும் நன்றி: 19 விநாடிகளில் முடித்துக் கொண்ட ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது – தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில்; “நான் கைது செய்யப்பட்ட போது, எனக்காக ஒன்லைன் மற்றும் அனைத்து வழியிலும் குரல் கொடுத்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி. விரைவில் உங்களை மீண்டும் சந்திப்பேன் என்று நம்புகிறேன். மீண்டும் நன்றி” என, ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கே ஜனாதிபதியாக இருந்த போது, அவரின் மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 2023 ஆம் ஆண்டு பிரித்தானியா சென்றார். இந்தப் பயணத்துக்காக 16.9 மில்லியன் ரூபாய் அரச நிதியை அவர் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, அவரை அண்மையில் சிஐடி கைது செய்தது.

இதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், இம்மாதம் 26ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க பேசிய மேற்படி வீடியோ 19 விநாடிகள் மட்டுமே நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது.