தலைப்புச் செய்திகள்

நீதிமன்றத்தில் ரணிலை நேரடியாக இன்று ஆஜர்படுத்த வாய்ப்பில்லை: சிறைச்சாலை பேச்சாளர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக இன்று (26) அவரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட வாய்ப்பில்லை என்று சிறைச்சாலைகள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இன்று 26ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையிலும் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலை காரணமாக, அவரை நீதிமன்றில் ஆஜர் செய்ய முடியாமல் போகலாம் என, ஏற்கனவே வைத்தியசாலை வட்டாரங்களும் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.