
முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை தொடர்ந்தும் இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (26) உத்தரவிட்டார்.
ஊழல் மற்றும் சதித்திட்டக் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இம்மாதம் 06ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
2022ஆம் ஆண்டில் நடைபெற்ற அரகலய போராட்டங்களின் போது செவனகல – கிரிப்பன் வேவ பகுதியிலுள்ள அரச நிலத்தில் அமைந்திருந்த கட்டடம் தீக்கிரையாக்கப்பட்டதாக கூறி, மற்றொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பில் – முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

இந்தப் பின்னணியில் அவர் இம்மாதம் 06ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டு வருகிறார்.


