
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, பிரதமர் ஹரினி அமரசூரிய சென்று பார்வையிட்டார் எனும் பொய்யான செய்தியை வெளியிட்ட ஹிரு ஊடக நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்வது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது எனும் – தகவல்கள் வெளியாகியுள்ளதாக, சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு உண்மைக்கு புறம்பான தகவலை வழங்கி – பிரதமருக்கு மன உளைச்சல் ஏற்படவும் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படவும் காரணமாக அமைந்ததாக ஹிரு ஊடகம் மீது குற்றம் சாட்ட பட்டிருப்பதோடு, இந்த ஊடக நிறுவனத்தின் அனுமதி பாத்திரத்தை ரத்து செய்வது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக, அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
சமூக ஊடகத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர் ஹுசைன் எழுதியுள்ள பதிவு ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவின் முழு விபரம் வருமாறு;
‘முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதும் 2025.08.26 ஆம் திகதி வரையான தடுத்து வைப்பும் புதிய விவாதத்தை சட்டத்துறையினர் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தி சட்டததரணிகள் – இந்த கைதும் தடுத்து வைய்ப்பும் சரியானது என்று வாதிடுகின்றனர். ஆனால் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான எதிர்க்கட்சி சட்டத்தரணிகள், இந்த கைதும் தடுத்து வைய்ப்பும் தவறானது என்கிற வாதத்தைமுன்வைக்கின்றனர் .
அதெப்படி ஒரே சட்டக்கல்லூரி அல்லது சட்ட பீடத்தில் கற்று தேர்ந்த சட்டத்தரணிகள், ஒரே விடயத்தை இரண்டு விதமான வர்ணம் கொண்ட கண்ணாடியால் பார்க்க முடியும்.
அதே நேரம் பிரதமர் ஹரிணி அமரசூரிய நள்ளிரவில் – மைத்ரி விக்கிரமசிங்காவுடன் ரணிலை பார்ப்பதற்கு சென்றதாக, ஹிரு நிறுவனம் தகவல் வெளியிட்டதால் புதிய சர்ச்சை உருவாக்கி இருக்கின்றது .
இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் ஆதாரமற்றது என்றும் பிரதமர் அலுவலகம் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கின்றது .
அதனால் HIRU NEWS குறித்து தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர் . கட்சிக்குள் உட்பூசல்களை ஏற்படுத்தும் நோக்கில் இப்படியான செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

அத்துடன் நாட்டு மக்களுக்கு உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டு, பிரதமருக்கு மன உளைச்சல் ஏற்படவும் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படவும் காரணமாக அமைந்ததாக குற்றம் சாட்ட பட்டிருப்பதோடு, இந்த ஊடக நிறுவனத்தின் அனுமதிப் பாத்திரத்தை ரத்து செய்வது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன’ என்று அமீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஒருபோது விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் நாட்டில் உச்ச கட்டத்தில் இருந்த காலப்பகுதியில் ரன்மினித்தென்ன பகுதிக்குள், விடுலைப் புலிகள் ஊடுருவி உள்ளனர் என்று, ஒரு செய்தியை பரப்பியதால், அன்றைய காலகட்டத்த்தில் அதன் வானொலி அனுமதி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டமையையும் அமீர் ஹுசைன் நினைவு கூர்ந்துள்ளார்.
ஹிரு வானொலி வௌயிட்ட அந்த செய்தியை கேட்ட மக்கள், விடுதலைப் புலிகளுக்கு பயந்து – பீதியடைந்து அந்த இ்டத்தை விட்டு 12 கிலோமீட்டருக்கு அப்பால் பாதுகாப்பு தேடி ஓடினர் என்றும் தெரிவித்துள்ளார்.



