
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதிய உத்தியோகபூர்வ கடிதத்திலிருந்த பிழையைத் திருத்தி, மீண்டும் வெளியிட்டுள்ளார். முன்னைய கடிதத்தில் ஜனாதிபதியின் முதல் பெயர் ‘அருண’ (Aruna) என்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஜூலை 9, 2025 திகதியிட்டு எழுதிய முதல் கடிதத்தில், இலங்கை ஜனாதிபதியின் பெயரை தவறாக குறிப்பிட்டிருந்தா். அந்தக் கடிதத்தில் ஓகஸ்ட் 01 முதல் இலங்கை ஏற்றுமதிகள் மீது 30% வரியை அமெரிக்கா தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அந்தக் கடிதத்தில் இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதில் இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ட்ரம்ப் விருப்பம் தெரிவித்திருந்தார்.
‘வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு உங்கள் வர்த்தக கூட்டாளியாக உங்களுடன் பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம்’ என்றும் டிரம்ப் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னைய கடிதத்தில் இலங்கை ஜனாதிபதியின் பெயர் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்ததை, நேற்றைய தினமே திருத்தி – ட்ரம்ப் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



