தலைப்புச் செய்திகள்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் உட்பட மூவர் கைது

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க உட்பட மூன்று பேரை – லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

சுங்கத் திணைக்களம் விடுவிக்காத ஒரு வாகனத்தின் சட்டவிரோத பதிவு தொடர்பான விசாரணையின் பேரில் இவர்கள் கைதாகியுள்ளனர்.

டொயோட்டா வகை SUV ரக வாகனத்தை சட்டவிரோதமாக அங்கீகரித்து பதிவு செய்தமைக்காக, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டார் என்று, லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த வாகனத்திற்கான பதிவு எண்ணை வழங்குவதற்கு நிஷாந்த அனுருத்த வீரசிங்க ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் உதவி பணிப்பாளர் பிரியந்த பண்டார எரியகம மற்றும் தம்மிக நிரோஷன் என்ற எழுத்துவினைஞரும் இதன்போது கைது செய்யப்பட்டனர். பதிவு செய்வதற்கு உதவும் சட்டவிரோத தரவு உள்ளீட்டு செயல்முறையை எளிதாக்கியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் இன்று (ஜூலை 1) மேற்படி மூவரையும் கைது செய்தனர்.