
ஈரான் தலைநகர் பக்தாத்தில் – இஸ்ரேலிய கொடியை எரித்து, கொல்லப்பட்ட ஈரானிய ராணுவத் தளபதிகளின் உருவப்படங்களை ஏந்தியும் பேரணி நடவடிக்கையொன்று இன்று (17) இடம்பெற்றுள்ளது.
ஈரான் – இஸ்ரேலுக்கு இடையில் கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக இந்தப் பேரணி நடந்துள்ளது.
இதன்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் ஆகியோரின் உருவ பொம்மைக்கு பேரணியில் கலந்து கொண்டோர் சப்பாத்து மாலை அணிவித்திருந்தனர்.
கடந்த வாரம் ஈரான் மீதான இஸ்ரேலின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து முழு அளவிலான பிராந்தியப் போர் தீவிரமடைவதற்கான எச்சரிக்கைகள் வந்துள்ள நிலையில், ஈராக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளை திருப்பியனுப்பக் கோரி – மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
தொடர்பான செய்தி: சதாம் ஹுசைனுக்கு ஏற்பட்ட முடிவே, ஆயத்துல்லா கமெய்னிக்கும் நடக்கும்: இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை



