தலைப்புச் செய்திகள்

அரச வங்கியொன்றில் சுமார் 10 கோடி ரூபாய் மோசடி செய்த 03 பெண் அதிகாரிகள் கைது

ரச வங்கியொன்றில் 99.3 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் அந்த வங்கியில் பணியாற்றும் மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட வங்கியின் அடகுப் பிரிவில் பணிபுரிந்த சந்தேக நபர்கள், 24 கரட் தங்கம் போன்ற – போலி தங்கப் பொருட்களை அடகு வைத்து, பணத்தை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் ஏற்கனவே வெளிநாடு சென்றுவிட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மோசடியில் ஈடுபட்ட மேலும் பல வங்கி அதிகாரிகள் குறித்து காவல்துறை விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.