தலைப்புச் செய்திகள்

இந்த வருடம் நடந்த வீதி விபத்துக்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை வெளியீடு

நாடு முழுவதும் இந்த ஆண்டு இதுவரை நடந்த வீதி விபத்துகளில் மொத்தம் 1,007 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 1 முதல் மே 18 வரை நாடு முழுவதும் மொத்தம் 944 விபத்துகள் நடந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

அலட்சியம், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் முறையற்ற வாகன பராமரிப்பு ஆகியவை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாகும் என பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

போக்குவரத்து விபத்துகளைக் குறைக்க – நாடு முழுவதும் ஒரு விசேட திட்டத்தை செயல்படுத்த பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் சாரதி விழிப்புணர்வுத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.

இதவேளை, இந்த ஆண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டியமைக்காக 26,000 க்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.