
பாடசாலை ஆண் ஆசிரியர் ஒருவர் – அங்குள்ள மாணவியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் மாத்தறை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெவிநுவர பகுதியிலுள் ள பாடசாலையொன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றும் சந்தேக நபர், சம்பந்தப்பட்ட மாணவி பாடத்தில் காண்பித்த ஆர்வம் காரணமாக, அவருடன் நெருக்கமாகியுள்ளார். இந்த நிலையில் பல முறைப்பாடுகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவியிடமிருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைத்திய பரிசோதனைக்காக மாணவி – மாத்தறை பொது வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஒரு சிறுமியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்த முயன்ற குற்றச்சாட்டில் – கைது செய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



