
யாழ்ப்பாணம் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, உண்மைகளை உறுதிப்படுத்துவதற்காக மனுவை அடுத்த மாதம் ஜூன் 26, அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனு, இன்று (14) காலை நீதியரசர்கள் மாயாதுன்னே கொரேயா மற்றும் மஹேன் கொபல்லாவ ஆகியோர் அடங்கிய இரு உறுப்பினர்களைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.



