
டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
டெங்குவைப் பரப்பும் அதே கொசுக்களால் சிக்குன்குனியாவும் பரவுகிறது என்று, பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா விவரித்துள்ளார்.
நீண்ட வார விடுமுறை மற்றும் பாடசாலை விடுமுறைகள் காரணமாக, பலர் சுற்றுநுலா சென்றுள்ளமையினால் – தங்கள் வீடுகளையும், சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தம் செய்யும் வாய்ப்பை இழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இவ்வாறு சுத்தம் செய்யப்படாமையினால் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
டெங்கு மற்றும் சிக்குன்குனியா இரண்டும் ஒரே நுளம்பினல் பரவுகின்றன என்றும், இதன் காரணமாக நுளம்புகள் உற்பத்தியாவதைத் தடுக்க, தங்கள் சுற்றுப்புறங்களை தொடர்ந்தும் சுத்தம் செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



