தலைப்புச் செய்திகள்

31 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்பு: அமைச்சர் வசந்த தகவல்

ரச சேவையில் 31 ஆயிரம் பட்டதாரிகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக பத்தாயிரம் மில்லியன் (1000 கோடி) ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அனுராதபுரம் நகர மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பட்டதாரிகள் போட்டி பரீட்சைகள் மூலம் வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அத்தோடு, இந்த ஆண்டு இரண்டாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.