
தேர்தல் சட்டங்களை மீறியதற்காக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 13 வேட்பாளர்கள் – மார்ச் 03ஆம் திகதியிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், 42 அரசியல் கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 11 வாகனங்களையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.
வன்முறை சம்பவம் மற்றும் தேர்தல் சட்ட மீறல் தொடர்பில், நேற்று (08) காலை 6 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை 12 சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில், ஒரு வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 3 ஆம் திதி முதல் மொத்தம் 24 வன்முறை சம்பவங்கள் தொடர்பிலும், 99 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாகவும் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
இதையும் பாருங்கள்



