
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாமறு, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து – தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிறப்புச் சான்றிதழ்களின் உறுதிப்படுததப்பட்ட நகல்களை சமர்ப்பிக்காமை, முறையாக உறுதிமொழி சமர்ப்பிக்கப்படாமை மற்றும் பிறப்புச் சான்றிதழ்களின் நகல்களை மட்டுமே சமர்ப்பித்ததன் அடிப்படையில் தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை எதிர்த்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நீதிமன்றில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.



