தலைப்புச் செய்திகள்

பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் திகதி அறிவிப்பு

பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள், ஏனைய சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறும் தினத்தில் நடத்தப்படும் என்று, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, மேற்டி உள்ளூராட்சி சபைகளுக்ககான தேர்தல்கள் மே மாதம் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு இன்று (27) தெரிவித்துள்ளது.

பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டி உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் – நாடு முழுவதுமுள்ள ஏனைய உள்ளூராட்சி சபைகளிலிருந்து தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று நண்பகல் 12 மணியுடன் அந்த நடவடிக்கைகள் முடிவடைந்தன.

நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக, மேற்படி உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யம் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆயினும், வழக்குத் தொடர்ந்த தரப்பினர் தங்கள் வழக்குகளை மீளப் பெற்றுக் கொண்டமையை அடுத்து, மேற்படி மூன்று சபைகளுக்கும் வேட்புமனுக்கள் கோரப்பட்டன.