தலைப்புச் செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

ள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் தபால் வாக்களிப்புக்கான திகதிகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் அனைத்து மாவட்டச் செயலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களிலும் நடைபெறும்.

இதற்கிடையில், மேற்கூறிய திகதிகளில் தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்கள், ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் வாக்களிக்க முடியும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்பான செய்தி: உள்ளூராட்சித் தேர்தல்: ஒரு வாக்களருக்கு ஒரு வேட்பாளர் செலவிடும் அதிகபட்ச தொகை பற்றிய விவரம் அறிவிப்பு