
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவரை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொதுப் பணியில் இருந்த காலகட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் தவறான நடத்தை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டதாக லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாமர சம்பத் அரசாங்கத்தை நாடாளுமன்றில் மிகக் கடுமையாக விமர்சிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.



