தலைப்புச் செய்திகள்

சாமர சம்பத் எம்.பிக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

ஊழல் குற்றச்சாட்டுகளின் பொருட்டு இன்றைய தினம் கைது செய்யப்பட்ட பொதுஜன பெரமுனவரின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்பட்டமையை அடுத்து, அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

லஞ்ச, ஊழல் ஆணைக்கு இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து வாக்கு மூலம் பதிவு செய்ததை அடுத்து, அவர் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

03 ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.