
இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டு பெண்ணொருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் மாத்தளை மாவட்டம் – கலேவல பிரதேச சபைக்கு போட்டியிடும் பொருட்டு, சுயேட்சைக் குழு சாப்பாக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக மேற்படி பெண் – கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.



