
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வந்தார்.
தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து தலைமறைவான தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவானின் உத்தரவை இடைநிறுத்த இடைக்கால உத்தரவைக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனாலும், நேற்று முன்தினம் திங்கட்கிழமை இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் சரணடைந்தார்.
தொடர்பான பதிவு



