தலைப்புச் செய்திகள்

சட்டத்தரணி சுவஸ்திகா மீதும் கீழ்தரமான வார்த்தைகளால், அர்ச்சுனா எம்.பி வன்மத் தாக்குதல்

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா – யுவதி ஒருவரை நாடாளுமன்றத்தில் ‘விபச்சாரி’ என்று கூறியதற்கும், முஸ்லிம்களை திட்டி நாடாளுமன்றத்தில் பேசியதற்கும் கண்டனம் வெளியிட்டிருந்த – மனித உரிமை செயற்பாட்டாளர் சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கத்தை, மிக கீழ்தரமான வார்த்தைகளால் அர்ச்சுனா எம்.பி திட்டி எழுதியுள்ளார்.

அர்ச்சுனா எம்.பி அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, யுவதி ஒருவரின் பெயர் மற்றும் விலாசத்தைக் குறிப்பிட்டு, அவர் ‘விபச்சாரி’ எனத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இதுவரை எதிர்வினையாற்றாத நிலையில், அர்ச்சுனா எம்.பியின் அந்த உரையினையும், அவர் முஸ்லிம்களை தொடர்ச்சியாக திட்டிப் பேசுவதையும் கண்டித்து, சட்டத்தரணி சுவஸ்திகா இன்று (15) தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்தார்.

‘டொக்டர் அர்ச்சுனா ராமநாதன் தனது நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி பெண்களைத் துன்புறுத்துகிறார். நாடாளுமன்ற உறுப்பினராக தனது சிறப்புரிமையைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கி வருகிறார்’ என அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சட்டத்தரணி சுவஸ்திகா இவ்வாறு கண்டனம் வெளியிட்டமையினை அடுத்து, இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் சுவஸ்திகாவின் பெயரைக் குறிப்பிட்டு பதிவொன்றை இட்டுள்ள அர்ச்சுனா எம்.பி; ‘பெட்ட நாய்’ எனும் கீழ்தரமான வார்த்தையினை பயன்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த YouTuber ஒருவரை ‘விபச்சாரி’ எனக் குறிப்பிட்ட அர்ச்சுனா எம்.பி, பின்னர் வடக்கிலிருந்து YouTube ஊடாக செய்திகளை வழங்கி வரும் சங்கவி எனும் பெண்ணையும் ‘நடத்தை கெட்டவர்’ என்று பகிரங்கமாக அபாண்டம் சுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது அர்ச்சுனாவின் இவ்வாறான செயற்பாடுகளை சுட்டிக்காட்டி கண்டனம் வெளியிட்டிருந்த மனித உரிமை செயற்பாட்டாளரான பெண் சட்டத்தரணி ஒருவரையே ‘பெட்டை நாய்’ என கேடுகெட்ட தனமாய் எழுதியுள்ளார்.

இருந்த போதிலும் – தான் இவ்வாறு எழுதிய பதிவில் ‘பெட்டை நாய்’ எனக் குறிப்பிட்டிருந்த வரிகளை, பின்னர் அர்ச்சுனா எம்.பி நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனாவின் இந்த கேவலமான தொடர் நடத்தைகளை எந்தவொரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரும் – இதுவரை கண்டிக்கவில்லை என்பதும், எந்தவொரு பெண் அமைப்பும் இதற்கெதிராக போராட்டங்களை நடத்தவில்லை என்பதும் கவலையளிக்குரியது.

தொடர்பான செய்தி: அர்ச்சுனா எம்.பியின் உரைக்கு சட்டத்தரணி சுவஸ்திகா கண்டனம்