தலைப்புச் செய்திகள்

அர்ச்சுனா எம்.பியின் நாடாளுமன்ற உரைக்கு, முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு

– மப்றூக் –

முஸ்லிம்கள் ஒரு தனி இனமல்ல என்றும் அவர்களும் தமிழர்கள்தான் எனவும் யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் – நேற்று (24) நாடாளுமன்றத்தில் பேசிமைக்கு, முஸ்லிம்கள் மத்தியில் எதிர்ப்புக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன.

நாடாளுமன்றில் நேற்று – மூன்று மொழிகளில் பேசிய அர்ச்சுனா ராமநாதன், சிங்களத்தில் பேசும் போதே இதனைக் கூறினார்.

“சிங்களவர், தமிழர் என இரண்டு இனங்களே நாட்டில் உள்ளன. தமிழ் இனத்தினுள் . முஸ்லிம்கள் உள்ளடங்கியுள்ளனர்” என, அர்ச்சுனா ராமநாதன் தனது உரையில் குறிப்பிட்டார்.

இலங்கை முஸ்லிம்கள் ‘தனியான தேசிய இனம்’ எனும் அங்கிகாரத்துடன் இருக்கத் தக்கதாக, அவர்களை ‘தமிழர்கள்’ என, அர்ச்சுனா ராமநாதன் கூறியமை, முஸ்லிம் விரோத கருத்தாக உள்ளது என்று, இவரின் உரைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் கூறுகின்றனர்.

ஆனாயிலும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் – சபையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அர்ச்சுனா ராமநாதன் பேசும் போது, அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, மலையகத் தமிழர்களை ‘கப்பலில் வந்த அடிமைகள்’ எனும் அர்த்தப்பட அர்ச்சுனா எம்.பி தெரிவித்திருந்தமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது. (அது தொடர்பான வீடியோவை இந்த ‘லின்க்’ இல் காணலாம்)

நாடாளுமன்றத்துக்கு வந்த முதல் நாள் – எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், இனங்களுக்கிடையில் தேவையற்ற மனக் கசப்புகளையும், முறுகலையும் ஏற்படுத்தி வருகின்றார்.

இவர் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய தயாசிறி ஜயசேகர எம்.பி, “மனநல பரிசோதனைக்கு அர்ச்சுனாவை அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்திருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.

முஸ்லிம்கள் தொடர்பில் அர்ச்சுனா எம்.பி தெரிவித்த கருத்து