
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (18) காலை கூடியது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் நேற்று (17) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும், குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவிப்பு இன்னும் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கவில்லை.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு பெற்றவுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை ஆணைக்குழு தீர்மானிக்கும்.
இதற்கிடையில், நேற்று நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தை தான் அங்கீகரித்ததாக – சபாநாயகர் இன்று சபையில் அறிவித்தார்.



