
கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டமையினை அடுத்து, பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைப்பதற்கு – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இணங்கி இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலையை செரண்ட்டிப் மற்றும் ப்ரீமா மா ஆலை நிறுவனங்கள், கிலோ ஒன்றுக்கு 10 ரூபா குறைத்துள்ளன.
இருந்தபோதிலும் கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய் படி – கோதுமை மாவின் விலையைக் குறைக்காமல், பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க முடியாது என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கும் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இணங்கி இருப்பதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.



