
– பாறுக் ஷிஹான் –
சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் அமைந்துள்ள சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திலுள்ள சிற்றுண்டி சாலை, சுகாதார முறையில் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய இன்று திங்கட்கிழமை (10) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எம். நௌசாத் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதனையடுத்து சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய குறித்த சிற்றுண்டிசாலை உரிமையாளருக்கு எதிராக, சுகாதார வைத்திய அதிகாரிகளினால் வழக்கு தாக்கல் மேறடகொள்ளப்பட்டு, சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன்போது உரிய நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கையையும் விடுக்கப்பட்டது.



