
வெள்ளத்தால் கடந்த வருடம் நொவம்பர் மாதம் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்குரிய இழப்பீடு இன்று (30) முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கமநல மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்துள்ளார்.
அதன்படி, பயிர் சேதமடைந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் குறித்த நட்டஈட்டுத் தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார் கூறியுள்ளார்.
அதன்படி, 13,379 ஏக்கருக்காக, 6,234 விவசாயிகளுக்கு இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



