
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன ராமநாதன் நேற்று (29) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அவரை யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று (29) அனுராதபுரம் பொலிஸார் கைது செய்தனர்.
அவனது வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத விஐபி விளக்குகளைப் பயன்படுத்தியததாக கூறி, அவரை போக்குவரத்து பொலிஸார் நிறுத்திய போது, பொலிஸாருடன் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்பான செய்தி: அர்ச்சுனா எம்.பி யாழ்ப்பாணத்தில் வைத்து கைது
இதையும் பாருங்கள்



