தலைப்புச் செய்திகள்

காலி சிறைச்சாலை மோதல்: நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

காலி சிறைச்சாலையில் இன்று (26) பிற்பகல் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது நான்கு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுபாட்டை மீறிய நிலையில் இந்த மோதல் ஏற்பட்டதாக – இந்த விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறைச்சாலையின் வெளிப்புறப் பகுதியில் – பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.