
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரின் மனைவியும் நேற்று (22) கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இன்று (23) அவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு பிங்கிரிய மற்றும் நாரம்மல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 6.1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பெற்ற நிலையில், அந்த நிதியை 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சரும் அவரின் மனைவியும் நேற்று மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.



